Tamilசெய்திகள்

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக நியமிக்கப்பட்ட ராஜேந்திர அர்லேக்கர்

தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்புக் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்த ராஜேந்திர அர்லேக்கர், முழுநேர ஆளுநராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, கேரளா மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்; மேலும், ஒடிசா மாநிலத்திற்குப் பிரஜ் மோகன் ராம், கர்நாடகாவிற்கு டாக்டர் சுதா யாதவ், உத்தரகாண்டிற்கு டாக்டர் தல் சிங் பிசேன் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்குத் துஷ்யந்த் கௌதம் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.