மைசூர் தசரா திருவிழா – ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், குதிரைகளுக்கான ஒத்திகை நடத்தப்பட்டது
புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிரம்மாண்டமான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க உள்ள யானைகள் மற்றும் குதிரைகளுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 20-ஆம் தேதி மகா நவமி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மறுநாளான அக்டோபர் 21-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த யானைகளின் பிரம்மாண்ட ஊர்வலம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
கர்நாடகாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் பெருமையையும் உலகிற்குப் பறைசாற்றும் வகையில் நடைபெறும் இந்த மைசூர் தசரா பெருவிழாவைக் காணவும், கம்பீரமான யானைகளின் அணிவகுப்பை நேரில் கண்டு ரசிக்கவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மைசூரில் குவிகிறார்கள்.
