நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் கட்டண உயர்வால் மருத்துவம் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்!
நீட்-2026 தேர்வில் நாடு முழுவதும் 11 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று தகுதி பெற்றிருந்த போதிலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் (Deemed Universities) ஆண்டுக் கட்டணம் ₹23 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் 836 எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகக் கிடக்கின்றன.
தகுதித்திறனை நிரூபித்த பிறகும் பெற்றோரின் வங்கிச் சேமிப்பை வைத்தே மருத்துவக் கனவு தீர்மானிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதால், சாதாரண மற்றும் ஏழை எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு நீட் பொது நுழைவுத்தேர்வு சமமான வாய்ப்பை வழங்கத் தவறிவிட்டது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
திறமைக்கு மதிப்பளிக்காமல் பணத்திற்கு முன்னுரிமை அளிக்கும் இந்த அநியாயமான கட்டணக் கொள்ளையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்விக் கட்டணத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிப்பதன் மூலம் மட்டுமே தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி எட்டக்கூடியதாக மாறும் என சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்துகின்றனர்!
