மைசூர் தசரா விழாவில் கவனம் ஈர்த்த கேரளாவின் தெய்யம் கலை நிகழ்ச்சி!
பாரம்பரியம் மிக்க மைசூர் தசரா விழாவின் பிரம்மாண்ட ஊர்வலத்தில் கேரளா மாநிலத்தின் சார்பில் இடம்பெற்ற ‘தெய்யம்’ கலைநிகழ்ச்சியும் செண்டை மேளமும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
கர்நாடகாவில் நடைபெறும் தசரா விழாவில் அண்டை மாநிலமான கேரளாவின் புகழ்பெற்ற ஆன்மீகக் கலையான தெய்யம் மற்றும் செண்டை மேளத்தின் முழக்கம் விழாவின் கலாச்சாரப் பரிமாற்றத்தை மேலும் மெருகூட்டியுள்ளது.
மைசூரு தசரா கொண்டாட்டங்களின் பாரம்பரியச் சிறப்பை உயர்த்தும் வகையில் பல்வேறு மாநிலங்களின் கலைக் குழுக்களும் அலங்கார ஊர்திகளும் பங்கேற்றுள்ள நிலையில், கேரளாவின் பாரம்பரியப் பண்பாட்டை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
