நவம்பர் 1 ஆம் தேதி அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் 1.11.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை இராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தலைமைக் கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ள இந்த தலைமைக்கழக அறிவிப்பில், கட்சியின் அனைத்து மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறுமால் பங்கேற்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக ஆட்சிக்கால சம்பவங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுகவின் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
