உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டால் குறைக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் விலை!
புற்றுநோய் சிகிச்சைக்கான முக்கிய மருந்துகளின் விலையைச் சுமார் 70 சதவீதம் வரை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்துள்ளன. உச்சநீதிமன்றத்தின் தலையீடு மற்றும் வழிகாட்டுதலைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, நாடு முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார நிவாரணமாக அமைந்துள்ளது.
டோரண்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியலின் படி, 09/11/2026 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘Bevakalp 100 mg’ ஊசி மருந்து ரூ.10,500-லிருந்து ரூ.4,523.90 ஆகவும், ‘Bevakalp 400 mg’ ஊசி மருந்து ரூ.42,000-லிருந்து ரூ.13,136.00 ஆகவும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ‘Dashori 100’ மாத்திரை ரூ.8,345-லிருந்து ரூ.2,977.65 ஆகவும், ‘Palbotor 100mg’ கேப்சூல் ரூ.8,345-லிருந்து ரூ.2,531.15 ஆகவும், ‘Pemotide 500’ ஊசி மருந்து ரூ.6,985-லிருந்து ரூ.2,597.10 ஆகவும், ‘Tegoyes 20mg’ ரூ.3,064-லிருந்து ரூ.1,300.30 ஆகவும் குறைக்கப்பட்டு திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்றத்தின் இந்த மகத்தான முயற்சியால் உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகள் சாமானிய மக்களுக்கும் எட்டும் விலையில் கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது பல தரப்பினராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகிறது.
