தீபாவளி மறுநாள் நவம்பர் 9 ஆம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
தீபாவளி பண்டிகை 08.11.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு அடுத்த நாளான 09.11.2026 திங்கள்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துத் தமிழக அரசு அரசாணை (1டி) எண்.547 மூலம் உத்தரவிட்டுள்ளது;
பொது (பல்வகை)த் துறை அரசு செயலாளர் எ. சுந்தரவல்லி வெளியிட்டுள்ள இந்த ஆணையில், இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 28.11.2026 சனிக்கிழமை அன்று பணிநாளாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடுமுறையானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசரப் பணிகளை மேற்கொள்ளும் பொருட்டுத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
