Tamil

Tamilசெய்திகள்

பிரதமர் மோடி இரண்டு பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார்!

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா புறப்பட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சவுதி அரேபியாவின் புறப்படுகிறேன், அங்கு பல்வேறு கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளேன். சவுதி அரேபியாவுடனான நமது வரலாற்று உறவுகளை இந்தியா மதிக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இருதரப்பு உறவுகள் குறிப்பிடத்தக்க வேகத்தை அடைந்துள்ளன. மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் 2-வது கூட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அங்குள்ள இந்தியர்களுடன் கலந்துரையாடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை – சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை கடந்த 9-ந் தேதியில் இருந்து ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்து, கடந்த 12-ந்தேதி ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்து 160-க்கு விற்பனை ஆனது. இது அப்போது இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்த வண்ணம் காணப்படுகிறது. தினந்தோறும் விலை உயர்ந்து இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 275 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் சவரனுக்கு 2,200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More
Tamilசெய்திகள்

டாக்டர்.சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பிரபல புற்றுநோய் நிபுணரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு பகுதியில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர் சாந்தாவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவரது நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். ————————- மறைந்த போப் பிரான்சிஸுக்கு தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம்! கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக நேற்று காலமானார். போப்பின் உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

திருப்பதி கோவிலுக்கு காரில் வரும் பக்தர்களை எச்சரித்த காவல்துறை!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க சொந்த வாகனங்களில் வருபவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஷர்ஷவார்த்தன் ராஜு எச்சரிக்கை விடுத்து உள்ளார். கோடை வெப்பம் காரணமாக சமீபத்தில் திருப்பதி மலை பாதையில் வந்த 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து நிபுணர்கள் அளித்த அறிக்கை படி, பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 500 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வரும் வாகனங்கள் அதிகம் வெப்பம் அடைகிறது. மலைப்பாதையில் பயணம் செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் காரை நிறுத்தி அணைத்து வைக்க வேண்டும். எஞ்சின் கூல் அண்ட் ஆயில், பிரேக், ஏசி ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது ஏசியை பயன்படுத்தக் கூடாது. அடிக்கடி பிரேக் பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நியூட்ரலில் வாகனங்களை இயக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

Read More
Tamilசெய்திகள்

புறநகர் ஏசி மின்சார ரெயில்களின் கட்டணம் குறைக்கப்படாது – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார

Read More
Tamilசெய்திகள்

எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உடன் பா.ஜ.க. மாநில தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். இவர்களது சந்திப்பானது எதிர்க்கட்சி தலைவர் அறையில் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்புக்கு பின் அ.தி.மு.க. மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, தளவாய் சுந்தரம், கடம்பூர் ராஜூ ஆகியோரை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார். முக்கிய பிரச்சனைகளை ஒன்று சேர்ந்து எழுப்புவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி உறுதியான பின்பு எடப்பாடி பழனிசாமி- நயினார் நாகேந்திரன் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசெய்திகள்

பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சட்டசபையில் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: * மொழி, உணர்ச்சி, மொழி, மானம், மொழி பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் எழுத்துகளை மேற்கோள்காட்டி பேசாத தலைவர்களே இல்லை. * பல இளம் கவிஞர்களை உருவாக்கியவர் பாவேந்தர் பாரதிதாசன். * பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்.25 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும். * தமிழர் உணர்விலும் குருதியிலும் கலந்த புரட்சி கவிஞர் பாரதிதாசனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் வார விழா கொண்டாடப்படும். * கவிஞர் பாரதிதாசனை போற்றும் வகையிலான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். * பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும். * அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடைபெறும்.

Read More
Tamilசெய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை

Read More
Tamilசெய்திகள்

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் வழக்கு – இரண்டு பேருக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர். கடந்தாண்டு ஜூன் 19-ந்தேதி இந்த சம்பவம் நடந்தது. இதில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டவர்கள்

Read More
Tamilசெய்திகள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக சட்டசபையில் வினாக்கள்-விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சருடன் பேசி உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்து பல அரசு ஊழியர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் கவனத்துடன் பரிசீலிக்கிறார். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

Read More