செய்திகள்

Tamilசெய்திகள்

ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 13-ந்தேதி முதல் 17ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: தமிழகத்தில் இன்று முதல் 14-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும். 15-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Read More
Tamilசெய்திகள்

ரஷியாவின் மே 9 வெற்றி தினம் அணிவகுப்பில் பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு!

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனியை சோவியத் யூனியன் வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், மே 9 அன்று ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வெற்றி தினம் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க ரஷியா அழைப்பு விடுத்துள்ளது. மே 9, 1945 அன்று ஜெர்மனி, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனிடம் சரணடைந்ததை நினைவுகூரும் வகையிலான இந்த வெற்றி தின அணிவகுப்பு, ரஷியாவின் மிக முக்கியமான வருடாந்திர கொண்டாட்டங்களில் ஒன்றாகும். இந்நிலையில் இந்த அணிவகுப்புக்கு அழைப்புக் கடிதத்தை இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக ரஷிய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பிற நட்பு நாடுகளுக்கும் அழைப்புக் கடிதம் பறந்துள்ளது. பிரதமர் மோடி கடைசியாக 22வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டுக்காக ஜூலை 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜரானார்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். அசோக் குமார் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அமலாக்கத்துறை கடந்த ஜனவரியில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் அசோக்குமார் உள்ளிட்ட 13 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More
செய்திகள்

உத்தரப் பிரதேசத்தில் போர்வையில் சுற்றப்பட்ட தாய், மகள் சடலம் கண்டெடுப்பு! – கணவரை காணவில்லை

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.

Read More
Tamilசெய்திகள்

டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ரூ.1000 கோடி முதலீடு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ்பேஸ் தொழிற் பூங்காவில், 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டம் நிறுவுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும், பல்வேறு துறைகளில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாகவும் விளங்கி வருகிறது. முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுவதாக, 2024-25-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு 2024-25-ம் ஆண்டில் 9.69 சதவிகிதம் வளர்ச்சி வீதத்துடன் இந்திய அளவில் முதலிடம் பெற்று உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சி இதுவாகும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்கும், தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை 895 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 10 லட்சத்து 14 ஆயிரத்து 368 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 32 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. டிக்ஸன் டெக்னாலஜீஸ் நிறுவனம், மின்னணு நுகர் பொருட்கள், விளக்குகள் மற்றும் கைபேசி சந்தைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. சாம்சங், சியோமி, மோட்டாரோலா, போட், பேனசானிக், டி.சி.எல். டெக்னாலஜீஸ், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில், அவர்களின் பொருட்களை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற் பூங்காவில், மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, மடிக்கணினி மற்றும் ஒருங்கிணைந்த கணினி உள்ளிட்ட மின்னணு உற்பத்திச் சேவைகள் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் அமைந்துள்ள இண்டோஸ் பேஸ் தொழிற்பூங்காவில் நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு முகவான்மையான தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும் டிக்ஸன் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், காஞ்சிபுரம் மற்றும் அம்மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Read More
Tamilசெய்திகள்

திடீரென்று வென்னை வரும் அமைச்சர் அமித்ஷா – பா.ஜ.க முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரையும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களும் நட்சத்திர ஓட்டலிலேயே தங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அமித்ஷாவின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Read More
Tamilசெய்திகள்

குமரி அனந்தன் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

Read More
Tamilசெய்திகள்

பிரான்ஸிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான ராஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்தியா!

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.63,000 கோடி மதிப்பிலான 26 ரஃபேல் போர் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சரவைக் குழு நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவலின்படி, 22 ஒற்றை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும், 4 இரட்டை இருக்கை ரக ரஃபேல் கடற்படை விமானங்களும் பிரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன. இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ள நிலையில் அப்போது இதுதொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்தான தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே இந்திய விமானப்படை வசம் 36 ரஃபேல் ஜெட் விமானங்கள் உள்ளன. அவை அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தற்போது கொள்முதல் செய்யப்பட உள்ள விமானங்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

Read More
Tamilசெய்திகள்

கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

குஜராத் மாநிலத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சி பணிக்கு உதவி செய்யாதவர்கள் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கார்கே பேசியதாவது:- கட்சியின் அமைப்புகளை உருவாக்குவதில் மாவட்டத் தலைவர்களின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனவே, அவர்கள் கட்சியின் வழிகாட்டுதல்களின்படி பாரபட்சமின்றி நியமனம் செய்யப்பட வேண்டும். நாட்டின் அனைத்து மாவட்டத் தலைவர்களையும் மூன்று கட்டங்களாக அழைத்து பேசியுள்ளோம்.. ராகுல் காந்தியும் நானும் அவர்களுடன் பேசி அவர்களின் கருத்துக்களைப் பெற்றோம். எதிர்காலத்தில், தேர்தல்களுக்கான வேட்பாளர் தேர்வு நடைமுறையில் மாவட்டத் தலைவர்கள் ஈடுபாடு இருக்கும். கட்சிப் பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வெடுக்க வேண்டும். தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாதவர்கள் ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு கார்கே தெரிவித்தார்.

Read More
Tamilசெய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை

அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டுத் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அரசு, உதவி பெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு 23-ந்தேதியுடன்

Read More