செய்திகள்

Tamilசெய்திகள்

எல்லை தாண்டி மேகாலாய கிராமத்திற்குள் நுழைந்த வங்காளதேச ராணுவ வீரர்களை விரட்டியடித்த கிராம மக்கள்

வங்காளதேசத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 2 வீரர்கள் நேற்று முன்தினம் எல்லை தாண்டி வந்து மேகாலயா மாநிலம் தெற்கு காரோ ஹில்ஸ் பகுதியில் உள்ள கிராமத்திற்குள் நுழைந்தனர். இந்தியா- வங்காளதேச சர்வதேச எல்லை வேலியை ஒட்டி அந்த கிராமம் அமைந்துள்ளது. அந்த வீரர்கள் துப்பாக்கி மற்றும் லத்திகள் வைத்திருந்ததால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களிடம்

Read More
Tamilசெய்திகள்

மகளின் திருமணத்தை எளிமையாக நடத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பரகலா வாங்மயிக்கு, பிரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நேற்று எளிமையான முறையில் வீட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண விழாவில் அரசியல் தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. பல கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை அரசியல் ஆடம்பரம் எதுவும் இன்றி எளிமையாக நடத்தியது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதமாரு மடத்தின் வேதமுறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமண விழாவில் உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர்.

Read More
Tamilசெய்திகள்

71 வது உலக அழகிப் போட்டி இந்தியாவில் நடைபெறும் – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு மிஸ் வேர்ல்ட் உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடைசியாக 1996ம் ஆண்டில் உலக அழகிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெறவில்லை. இந்நிலையில், உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இதுகுறித்து மிஸ் வேர்ல்ட் உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி கூறுகையில், “71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது. ஒரு மாதம் நடைபெறும் இந்தப் போட்டியில் 130 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர். உலக அழகிப் போட்டி வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது” என்றார்.

Read More
Tamilசெய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்திர பிரதேச முதலமைச்சர் இரங்கல்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி

Read More
Tamilசெய்திகள்

இந்தியாவில் முதல் முறையாக பெண்களுக்கான ஹஜ் விமானம் இயக்கம்

டாடா குழுமத்தின் சர்வதேச பட்ஜெட் நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (ஏஐஎக்ஸ்எல்) நேற்று இந்தியாவின் முதல் முழு பெண் ஹஜ் விமானத்தை இயக்கியது. இதில் சுமார் 145 பெண் யாத்ரீகர்கள் பயணித்தனர். இந்த சிறப்பு விமானத்தின், அனைத்து முக்கியமான விமானப் பணிகளிலும் முழுக்க முழுக்க பெண் குழுவினர் ஈடுபட்டுனர். இது இந்திய ஹஜ் கமிட்டியின் புதிய முயற்சிக்கு ஆதரவாக இருந்தது. முதல் முழு பெண் ஹஜ் விமானம் IX 3025, கோழிக்கோட்டில் இருந்து நேற்று மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு, உள்ளூர் நேரப்படி 10:45 மணிக்கு ஜெட்டாவை

Read More
Tamilசெய்திகள்

ஆப்கானிஸ்தான் துணை ஆளுநரின் இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு – 11 பேர் பலி

வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

Read More
Tamilசெய்திகள்

நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. கலவரம் காரணமாக மணிப்பூர் மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More
Tamilசெய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் – அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைகிறது

தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. அதன்படி ஜூன் 8-ந் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் லட்சத்தீவு, நிக்கோபார், அரபிக்கடலில் காற்று வீசுவதில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இன்று தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ‘பிபோர்ஜோய்’ புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரம் கணக்கில் டிக்கெட்டுகள் ரத்து – ரெயில்வே துறை விளக்கம்

ஒடிசா மாநிலத்தில் 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிய கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். 1,175 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், சுமார் 900 பேர் சிகிச்சை முடிந்து அனுப்பப்பட்டு விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து மக்கள் மத்தியில் நீங்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் டிக்கெட்டுகளை ரத்து செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும், மக்கள் ரெயிலில் பயணம் செய்வதை பாதுகாப்பற்று உணர்வதால் அவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறியது. இதற்கு ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “ஒடிசா ரெயில் விபத்துக்குப் பிறகு ஆயிரக்கணக்கான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் கூறுவது முற்றிலும் தவறானது. டிக்கெட்டுகள் ரத்து செய்வது அதிகரிக்கவில்லை. மாறாக, 01.06.23 அன்று 7.7 லட்சமாக இருந்த டிக்கெட் ரத்து 03.06.23 அன்று 7.5 லட்சமாக குறைந்துள்ளது” என கூறியுள்ளது.

Read More
Tamilசெய்திகள்

ஜப்பானியர்களுக்கு சிரிக்க சொல்லிக் கொடுக்கும் கல்வி நிறுவனம் – ஒரு மணி நேரத்திற்கு ரூ.4,550

உலகளவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனால், மக்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் ஏற்பட்ட தாக்கம் மட்டுமல்லாமல், கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த மாஸ்க் அணியும் பழக்கம் தான் முதல் காரணம் என்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக மாஸ்க் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடு விதியில் இருந்து மாஸ்க் அணிவதற்கு விலக்கு அளித்தபோதும், இன்னமும் பலர் மாஸ்க் அணிந்துதான் வெளியே செல்கிறார்கள். அங்கு 8 சதவீத மக்கள் மட்டுமே மாஸ்க் அணிவதை நிறுத்தியுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில், டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை எடுத்து வருகிறது. முன்னாள் ரோடியோ தொகுப்பாளர் கெய்கோ கவானோ இந்த வகுப்பை எடுத்து வருகிறார். இந்த வகுப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 4,550 செலுத்தி ஜப்பானிய மக்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிரிப்பின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி சிரிக்க வேண்டும் என்றும், ஹாலிவுட் ஸ்டைல் ஸ்மைலிங் நுட்பங்களை கற்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது. கையில் கண்ணாடி ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிரிக்க பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read More