செய்திகள்

Tamilசெய்திகள்

உலக தர வரிசையில் முதல் 300 இடங்களில் இடம்பிடிப்பதே இலக்கு – அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பேட்டி

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை நேற்று முன் தினம் காலை வெளியிட்டு உள்ளது. இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது. அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தரவரிசையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருப்பது புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் ஒட்டுமொத்த தரவரிசையில் 22-வது இடத்திலும், அதற்கு முந்தைய ஆண்டு 25-வது இடத்திலும் இருந்தது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “உலக பல்கலைக்கழக தர வரிசை பட்டியலில், அண்ணா பல்கலைக்கழகத்தை முதல் 300 இடங்களுகு்குள் கொண்டு வருவதே இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவிக்கு படிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டையும் திராவிட மாடல் அரசு, இரண்டு கண்களாக நினைத்து போற்றி வருகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடாகவும், மக்கள் நலம் பேணுவதில் மிகச்சிறந்த தமிழ்நாடாகவும் நம்முடைய மாநிலம் தலைநிமிர்ந்து நிற்கிறது. ஆனால் இப்படி தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சி, மாநிலத்திலேயே மிக பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவருக்கு மட்டும் புலப்படவில்லை. அவர் திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அந்த கருத்துக்களை எல்லாம் விமர்சனங்களாக்கி தொடர்ந்து தினந்தோறும் ஏதாவது ஒரு செய்தியை மக்களை குழப்பக்கூடிய வகையில் அவர் செய்துகொண்டிருக்கிறார். அதைப்பற்றியெல்லாம் மக்கள் கவலைப்படமாட்டார்கள். என்னைப் பொருத்தவரை அவர் தொடர்ந்து அப்படி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு ஒரு எழுச்சி ஏற்படும். மக்களும் தெளிவாக புரிந்துகொள்வார்கள். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், கவர்னரின் கருத்துக்கு மறைமுகமாக முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு ஒருங்கிணைந்த தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சி பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் ரூ.125 கோடி செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார். ஒவ்வொரு நகர்ப்புற நலவாழ்வு மையத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார ஆய்வாளர், ஒரு தூய்மைப் பணியாளர் என இந்த மையங்களுக்காக 500 மருத்துவர்கள், 500 சுகாதார ஆய்வாளர்கள், 500 செவிலியர்கள், 500 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இம்மையம் செயல்படும். இந்த நலவாழ்வு மையங்கள் மூலம் அப்பகுதிகளில் வாழும் சுமார் 25 ஆயிரம் மக்கள் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு இருக்கைகள் ஒரு நாளைக்கு 62,464 வரை அதிகரிப்பு – அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி சுமார் 60000 பயணிகளில் 20.000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51.046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும். மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வசதி 07.06.2023 முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

கேட் திறக்க காலதாமதம் ஆனதால் சுங்கச்சாவடி ஊழியர் அடித்துக் கொலை – கர்நாடகாவில் பரபரப்பு

கர்நாடக மாநிலம் ராமநகரம் மாவட்டத்தின் பிடாடி நகரில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவில் திடீரென மோதல் ஏற்பட்டது. மைசூர் நோக்கி சென்ற ஒரு காரில் பயணித்த 4

Read More
Tamilசெய்திகள்

சாராய அமைச்சர் ஏழை எளிய மக்களை பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார் – அண்ணாமலை தாக்கு

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது

Read More
Tamilசெய்திகள்

மின் அளவை துள்ளியமாக கணக்கிட ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு – 3 கோடி ஸ்மார்ட் மீட்டருக்கு டெண்டர் விடப்பட்டது

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள். அவர்கள் கணக்கிட்டு

Read More
Tamilசெய்திகள்

தமிழகம் முழுவதும் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தரமான மருத்துவ சேவையை பெற்றிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 708

Read More
Tamilசெய்திகள்

ஊட்டியில் தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாடு – கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநாடு

Read More
Tamilசெய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கு மேலும் 4 நாட்கள் ஆகும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க

Read More