arabic sea

Tamilசெய்திகள்

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் – அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடைகிறது

தென்கிழக்கு அரபிக் கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்தம் உருவாகி உள்ளது. அதன்படி ஜூன் 8-ந் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிகுறிகள் லட்சத்தீவு, நிக்கோபார், அரபிக்கடலில் காற்று வீசுவதில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இன்று தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். இந்த புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிரா மாநிலம் வரையிலான நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ‘பிபோர்ஜோய்’ புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More