siva movie

Tamilசினிமா

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தற்காலிகமாக ‘எஸ்கே21’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதாகவும் இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. அதாவது, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது சமூக வலைதளத்தில் கேமராவின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனை அதிகம் பகிர்ந்து வரும் ரசிகர்கள் ‘எஸ்கே21’ படப்பிடிப்பு தொடங்கியதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Read More