அட்லி கெட்டிக்காரர் – பிரபல பாலிவுட் நடிகர் பாராட்டு
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:- அட்லி துறுதுறுப்பான இயக்குநராக இருக்கிறார். அவர் கதை சொல்கிற விதமும் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திடமிருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர்.
ஒரு கதையில் நம்ம பகுதி ஹீரோயிசமா, வில்லத்தனமா என்றெல்லாம் நான் பிரித்துப் பார்ப்பதில்லை. ஒரு கதையில் நின்று விளையாட என்ன இருக்கிறது என்று மட்டும்தான் யோசிப்பேன். அந்த வகையில் விஜய் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றி ரசிகர்கள் கண்டிப்பாகப் பேசுவார்கள்.
படத்தில் கால்பந்து விளையாட்டுக் கழகம் ஒன்றின் தலைவராக நடிக்கிறேன். பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வரும் பகுதி அது. சென்னையில் வெயில் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் அதுவும் எனக்கு பிடிக்கத்தான் செய்கிறது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.