Tamilசெய்திகள்

அதிநவீன வசதிகள் கொண்ட ப்ரோமெட் மருத்துவமனை! – அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்

அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ப்ரோமெட் மருத்துவமனை சென்னை திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற திறப்பு விழா நிகழ்வில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்துக் கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் நட்சத்திர தம்பதி சூர்யா – ஜோதிகா ஆகியோர் நட்பின் அடிப்படையில் கலந்துக் கொண்டார்கள். இவர்களுடன் முன்னாள் எம்.பி மற்றும் திருப்பதி எம்.எல்.ஏ-வுமான டாக்டர்.வரபிரசாத் ராவ், ஓய்வு பெற்ற பேங்க் ஆப் பரோடா வங்கியின் மேலாளார் கே.லட்சுமி ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிழக அரசின் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என்பது அரசு மருத்துவமனைகள் மற்றும் இன்றி ப்ரோமெட் போன்ற தனியார் மருத்துவமனைகளும் சான்றாக உள்ளது. மருத்துவ துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு டாக்டர். அருண் கல்யாணசுந்தரம், டாக்டர். ஸ்பூர்த்தி அருண் போன்ற உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள் தான் காரணம். இவர்களின் சேவைக்காக உலகின் பல்வேறு நாடுகள் காத்துக் கொண்டிருந்தாலும், தமிழகத்தில் தொடர்ந்து சேவை செய்வது பெருமையாக உள்ளது.

உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களை வெறும் நோயாளிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களை தங்களது குடும்பத்தில் ஒருவரைப் போல பார்த்து சிகிச்சை அளித்து வரும் ப்ரோமெட் மருத்துவமனையும், அதில் இருக்கும் வசதிகளும் வியக்க வைக்கிறது. என்னதான் பெரிய மருத்துவர்களாக இருந்தாலும், மக்களின் பொருளாதார நிலையை அறிந்து கட்டணம் வசூலித்து சிகிச்சை அளிக்கும் டாக்டர். அருண் மற்றும் டாக்டர். ஸ்பூர்த்தி இருவருக்கும், ப்ரோமெட் மருத்துவமனைக்கும், என் வாழ்த்துகள்.” என்றார்.

ப்ரோமெட் மருத்துவமனைப் பற்றி :

திருவான்மியூர் அருகே கொட்டிவாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில், ஒரு பிரதான இடத்தில் அமைந்துள்ள 30 படுக்கைகள் கொண்ட மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக உள்ள ப்ரோமெட் மருத்துவமனை மக்கள் எளிதில் வந்து போக கூடிய வசதிகளுடன், போக்குவரத்து வசதி அதிகம் உடைய இடத்தில் உள்ளது.

நோயாளிகள் தங்குவதற்காக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட உள்-நோயாளி வசதிகள், ஆம்புலன்ஸ் வசதியுடன் 24 மணிநேர அவசர சிகிச்சை, 7 படுக்கைகள் கொண்ட விசாலமான நான்கு வெண்டிலேட் செய்யப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அனுபவம் வாய்ந்த மற்றும் திறமையான ஆலோசகருடன் சமீபத்திய உயிர் காக்கும் உபகரணங்கள் உள்ளிட்ட பல வசதிகள் இங்கு உள்ளது.

கிளீவ்லேண்ட் கார்டியாக் கேர் உடன் இணைந்து கிழக்கு கடற்கரை சாலையில் முதல் முறையாக இதய நோய் சிகிச்சைக்கான கேத் லேப் வசதியும் உள்ளது.

நோயாளிகளீன் உடல் நலத்திற்காக மருத்துவ யோகா மற்றும் பிசியோதெரபி போன்ற மருத்துவ வசதிகள் உள்ளது. மேலும் முதியோர்களின் உடல்நலம் பாராமரிப்பு திட்டமான ‘சங்கல்ப்’ அறிமுகம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் மகன் அல்லது மகளுக்கு மனநிம்மதி அளிக்கும் சிகிச்சையும் இங்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருதய, நுரையீரல் மறுவாழ்வு, ஈ யோகா, ஜூம்பா உடற்பயிற்சி, பிசியோதெரபி மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை ஆகியவற்றின் முறைகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த நோய் மாற்று சிகிச்சைகள் முழுமையாகவும், சிறப்பாகவும் வழங்கப்படுகிறது.

ப்ரோமெட் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாக் சயின்ஸ் (PICS) லோழ் 24/7 இம்மருத்துவமனையில் நெஞ்சு வலிக்கான சிகிச்சை அளிக்கும் கிளினிக்கும் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவின் பிரபல இருதயவியல் மருத்துவர்களில் ஒருவரான டாக்டர். அருண் கல்யாணசுந்தரம், ப்ரோமெட் மருத்துவமனையின் தலைமை இருதயவியல் துறை மருத்துவராக பொறுப்பேற்றுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் மருத்துவ சேவை ஆற்றி வரும் டாக்டர். அருண் கல்யாணசுந்தரம், 15 வருடகால உலகதரம் வாய்ந்த அனுபவம் மிக்க மருத்துவ வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ப்ரோமெட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநராக இருக்கும் டாக்டர். ஸ்பூர்த்தி அருண், அமெரிக்கன் போர்டு சான்றளிக்கப்பட்ட மருத்துவர் ஆவார். அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் பயிற்சி பெற்று மருத்துவராக பணியாற்றிய இவர், தற்போது சென்னையில் 15 வருட உலகளாவிய அனுபவத்துடன் சிறப்பான மருத்துவ சேவை செய்துக் கொண்டிருக்கிறார். தடுப்பு இருதயவியல் மற்றும் மறுவாழ்வில் டாக்டர். ஸ்பூர்த்தி அருண் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *