அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.கவில் இணைந்தார்கள்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு மத்திய மந்திரி அமித்ஷா அவசர அழைப்பு விடுத்தார். அதன்பேரில் அண்ணாமலை இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் அண்ணாமலை தலைமையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட 18 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், சேலஞ்சர் துணை, கு.வடிவேல், கந்தசாமி உள்ளிட்டோர் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
பல்வேறு கட்சிகளை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர், முன்னாள் எம்.பி. ஒருவரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.