Tamilசெய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பெய்து வந்த கனமழை ஒய்ந்தது! – வானிலை சீரடையத் தொடங்கியதால் மக்கள் நிம்மதி

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த கனமழை ஓய்ந்து, தற்போது அப்பகுதியில் வானிலை சீரடையத் தொடங்கியுள்ளது. கடந்த 6 நாட்களாக நீடித்த இந்தத் தொடர்மழையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலேயே அதிகபட்சமாக ரியாசி மாவட்டத்தில் 473.2 மி.மீ மழை பதிவாகி சாதனை படைத்துள்ளது.

தொடர்மழை காரணமாகப் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் போக்குவரத்து முடங்கியதோடு, வீடுகள் மற்றும் கட்டமைப்பு வசதிகளும் பாதிக்கப்பட்டன. தற்போது வானிலை மையம் கணித்தபடியே பெரும்பாலான இடங்களில் மழை தணிந்து வெயில் தலைகாட்டத் தொடங்கியுள்ளதால், சீரமைப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும் ஜூலை 28 வரை பெரிய அளவில் மழை இருக்காது என்றும், அதன் பின்னர் மீண்டும் அடுத்தகட்ட மழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.