Tamilவிளையாட்டு

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் – இந்திய அணி காலியிறுதிக்கு முன்னேறியது

ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. முதலில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், ஹாங்காங்கின் யங் கா லாங் அங்குஸ் உடன் மோதினார். இதில் பிரனாய் 18-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஹாங்காங் முதலில் 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்து நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஜோடி தங்களது போட்டியில் வெற்றி பெற்றனர். தொடர்ந்து நடந்த ஒற்றையர் பிரிவில் லக்ஷயா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலை பெற உதவினர்.

இறுதியில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா காலிறுதியில் சீனாவுடன் மோதுகிறது.