Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 – ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா வெற்றி

ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ஆசிய விளையாட்டின் ஸ்குவாஷ் போட்டியில் நேற்று ஆண்கள் அணிகள் பிரிவில் சவுரவ் கோஷ், அபய்சிங், மகேஷ் மங்கோன்கர், ஹரிந்தர் பால் சந்து ஆகியோரை கொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

இதேபோல், பெண்கள் அணிகள் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.