Tamilவிளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி – துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி 2வது வெண்கலம் வென்றது

ஆசிய விளையாட்டு போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய இதுவரை 7 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற துடுப்பு படகுப் போட்டியில் ஆண்கள் நாற்கர ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர்கள் இரண்டாவது வெண்கலம் வென்றனர். இந்தியாவின் சத்னம் சிங், பர்மிந்தர் சிங், ஜாகர் கான், சுக்மீத் ஆகியோர் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.

சீனா தங்கமும், உஸ்பெகிஸ்தான் வெள்ளியும் வென்றது. இதன்மூலம் இந்திய அணி 1 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 8 பதக்கங்களைப் பெற்றுள்ளது.