ஆர்யாவுக்கு வில்லனான சிம்பு
‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் சிம்புவுக்கு அடுத்தடுத்து படங்கள் வந்தவண்ணம் உள்ளது. தற்போது ஹன்சிகா நடித்துவரும் ‘மகா’ படத்தில், கவுரவ வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தனது உடல் வாகை பழைய நிலைக்கே கொண்டுவர லண்டனில் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டுவரும் சிம்பு, ‘மகா’ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு’ படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்காக ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற ‘மப்டி’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கவிருக்கிறார். விரைவில், இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் தொடங்க உள்ளது. மற்றொரு கதாநாயகன் படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை.