இங்கிலாந்து, நியூசிலாந்து இடையிலான டி20 தொடர் நாளை தொடக்கம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் ஆட்டம் கிறிஸ்ட்சர்சில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் பேர்ஸ்டோவ், சாம் பில்ங்ஸ், கேப்டன் மார்கன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
சவுத்தி தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் விளையாடுவது சாதகமானதே. கேப்டன் வில்லியம்சன் விளையாடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே.
நியூசிலாந்து அணியின் கிராண்ட்ஹோம், குப்தில், டெய்லர், காலின்முன்ரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் நாளை மோதுவது 17-வது ஆட்டம் ஆகும். இதுவரை நடந்த 16 ஆட்டத்தில் இங்கிலாந்து 10-ல், நியூசிலாந்து 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.