இது தைரியமான முடிவுகளுக்கான நேரம் – பிரதமர் மோடி பேச்சு
இந்திய வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது. கொரோனா மட்டுமின்றி, வெட்டுக்கிளி தாக்குதல், புயல் போன்ற சவால்களையும் இந்தியா சந்தித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்.
சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம். இது, தைரியமான முடிவுகள் மற்றும் தைரியமான முதலீடுகளுக்கான நேரம்.
இது போன்ற பேரிடர்களை வெற்றிகரமாக சமாளிக்கும் அனுபவம் நமக்கு புதிய நம்பிக்கையை தருகிறது. பல்வேறு சவால்களுக்கு இடையில் பணியாற்றுபவர்கள் புதிய வாய்ப்புகளை பெறுகிறார்கள். நமக்கு ஒற்றுமையும், வலிமையும் தான் அந்த சவால்களை சந்திப்பதற்கான உற்சாக மருந்து.
இவ்வாறு அவர் பேசினார்.