இந்தியா 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளது – அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது. தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவானது.
5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
2024-க்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவைப் பெற முடியும்.
இவ்வாறு பேசினார்.