Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் – மோசமான சாதனையை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் வீரர்

இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஈவு இரக்கமின்றி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தது. உலகத்தரம் வாய்ந்த ரஷித் கான் பந்தை சிக்சராக பறக்க விட்டனர்.

அவர் 9 ஓவர்களில் 100 ரன்கள் வாரி வழங்கினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அளவு ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் உடன் 2-வது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் மைக் லிவிஸ் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 113 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்து வருகிறது. வஹாப் ரியாஸ் இங்கிலாந்துக்கு எதிராக 10 ஓவரில் 110 ரன்கள் வாரி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *