ஐபிஎல் போட்டி பர்பாமன்ஸ் உலக கோப்பை தேர்வுக்கு உதவியாக இருக்கும் – ஆஸ்திரேலிய வீரர் கருத்து
ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெரேன்டர்ப். 28 வயதாகும் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். முதல்போட்டியிலே அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தூக்கினார். 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றி முத்திரை படைத்தார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமான இவர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்து போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினார். ஒரு போட்டியில் 63 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளதால் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகமே. இதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசினால் உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெரேன்டர்ப் கூறுகையில் ‘‘உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பது என்பது உறுதியல்ல. இது எனக்கு உறுதியாகத் தெரியும். ஐபிஎல் தொடரில் ‘பெர்மார்மன்ஸ் செய்தால் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
என்னுடைய பலமே, புதுப்பந்தில் ஸ்விங் செய்வதுதான். இதன் மூலம் சில விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியும். இதனால் நான் சிறப்பாக பந்து வீசுகிறேன் என்று தேர்வாளர்கள் மனதில் முன்னிலையில் இருக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.