Tamilவிளையாட்டு

ஐபிஎல் வீரர்கள் ஏலம் 8 அணி வீரர்கள் பங்கேற்பு!

13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இதில் வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பல மாற்றம் முடிந்ததையடுத்து வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது.

இதில் 146 வெளிநாட்டவர் உள்பட 338 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். 8 ஐபிஎல் அணிகளுக்கும் அதிக பட்சமாக மொத்தம் 73 வீரர்கள் தேவைப்பட்டனர். ஆனால் 29 வெளிநாட்டவர் உள்பட 62 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதற்காக அணிகள் ரூ.140 கோடியே 30 லட்சம் செல விட்டன.

அதிகபட்சமாக ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ரூ.15.50 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வாங்கியது.

இந்திய வீரர்களில் பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக ரூ. 6.75ž கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் ரூ.10.75ž கோடிக்கும் (பஞ்சாப்), தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.10 கோடிக்கு (பெங்களூரு), வெஸ்ட் இண்டீஸ் வீரர் காட்ரெல் ரூ. 8.50 கோடிக்கும் (பஞ்சாப்) ஆஸ்திரேலியாவின் நாதன் குல்டர்-நைல் ரூ.8 கோடிக்கு (மும்பை), வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மையர் ரூ. 7.75ž கோடிக்கு (டெல்லி) ஏலம் போனார்கள்.

8 ஐபிஎல் அணிகளின் வீரர்கள் விவரம் வருமாறு:-

சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, முரளி விஜய், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, ரிதுராஜ் கெய்க்வாட், கரண் சர்மா, ஹர்பஜன் சிங், ‌ஷர்துல் தாகூர், ஆசிப், தீபக் சாஹர், ஜெகதீசன், மொனுசிங், பியூஸ் சாவ்லா, சாய் கிஷோர்.

வெளிநாட்டவர்- ஷேன் வாட்சன், பாப் டு பிளிசிலிஸ், பிராவோ, இம்ரான் தாஹிர், மிட்செல் சான்ட்னெர், நிகிடி, சாம் கர்ரன், ஹேசில்வுட்.

மும்பை இந்தியன்ஸ்- ரோகித் சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா, குர்ணால் பாண்ட்யா, இ‌ஷன் கிஷான், பும்ரா, சூர்யகுமார் யாதவ், ராகுல் சாஹர், அல்முல்பிரீத் சிங், ஜெயந்த் யாதவ், ஆத்திய தரே, அனுகுல் ராய், தவல் குல்கர்னி, சவுரப் திவாரி, மொனிஷ் கான், திக்விஜய் தேஷ்முக், பல்வாட் ராய்சிங்.

வெளிநாட்டவர்- குயிண்டன் டி காக், பொல்லார்டு, ரூதர்போர்டு, மலிங்கா, மெக்கிளேனகன், டிரென்ட் போல்ட், கிறிஸ் லின், நாதன் குல்டர்-நைல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- விராட் கோலி, பார்த்தீவ் பட்டேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது சிராஜ், பவன் நெகி, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங், தேவ்தத் படிக்கல், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, சபாஷ் அகமது.

வெளிநாட்டவர்- டி வில்லியர்ஸ், மொயீன் அலி, ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், ஜோஷ் பிலிப், கேன் ரிச்சர்ட்சன், இசுரு உதனா, ஸ்டெயின்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:- தினேஷ் கார்த்திக், ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, ரின்கு சிங், குல்தீப் யாதவ், பிரதீஷ் கிருஷ்ணா, சந்தீப் வாரியர், நாகர்கோட்டி, ஷிவம் மவி, சித்தேஷ் லாட், ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, பிரவீண் தாம்பே, நிகில் நாயக், மணிமாறன், சித்தார்த்.

வெளிநாட்டவர்- பேட் கம்மின்ஸ், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், ஹாரி கர்னே, மோர்கன், கிறிஸ் கிரீன், டாம் பாண்டன்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஷ்ரேயாஸ் அய்யர், ரகானே, ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரி‌ஷப் பண்ட், அக்சர் பட்டேல், அமித் மிஸ்ரா, ஹர்‌ஷல் பட்டேல், இஷாந்த் சர்மா, அவனேஷ் கான், ரவீச்சந்திரன் அஸ்வின், மொகித் ஷர்மா, துஷர் தேஷ்பாண்டே, லலித் யாதவ்.

வெளிநாட்டவர்- ஜாசன் ராய், கிறிஸ் வோக்ஸ், அலெக்ஸ் கேரி, ஹெட்மயர், கீமோ பால், மார்கஸ் ஸ்டோனிஸ், ரபடா, சந்தீப், லாமிச்சென்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், மன்தீப் சிங், சர்பிராஸ் கான், அர்ஷ்தீப் சிங், முருகன் அஸ்வின், ஹர்பிரீத் பிரார், முகமது ‌ஷமி, தர்‌ஷன் நல்கந்தே, தீபக் ஹுடா, கவுதம், சுஜித், இ‌ஷன் போரெல், ரவி, பிஷ்னோய், தஜிந்தர் தில்லான், பிரப்சிம்ரன் சிங்.

வெளிநாட்டவர்- கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், மேக்ஸ்வெல், முஜிப்-உர்-ரஹ்மான், வில்ஜோன், காட்ரெல், ஜேம்ஸ் நீசம், ஜோர்டான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்- சஞ்சு சாம்சன், ரியன் பிராக், ‌ஷசானக் சிங், ஷ்ரேயாஸ் கோபால், வருண் ஆரோன், ராபின் உத்தப்பா, மனன் வோரா, அன்கீத் ராஜ்புட், மயங்க் மார்கண்டே, ராகுல் தேவதியா, மஹிபால் லொம்ரோர், ஜெய்தேவ் உன்ட்கட், யஷாஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, அனிருதா அசோக் ஜோஷி.

வெளிநாட்டவர்- ஸ்டீவன் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், ஆர்ச்சர், டேவிட் மில்லர், ஓஷானே தாமஸ், டாம் கர்ரன், ஆன்ட்ரு டை.

ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மணிஷ் பாண்டே, விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, விர்த்திமான் சகா, கோஸ்வமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், நதீம், டி.நடராஜன், விராட் சிங், பிரியம் கார்க், சந்தீப் பவனகா, சஞ்சய் யாதவ், அப்துல் சமத், பாசில் தம்பி.

வெளிநாட்டவர்- கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ், முகமது நபி, ரஷித்கான், பில்லி ஸ்டன்லேக், மிட்செல் மார்ஷ், பாபியன் ஆலேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *