ஓட்டல்களில் பழைய கட்டணமே தொடரும் – ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் நாளை முதல் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத இருக்கைகள்தான் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ‘‘தமிழகம் முழுவதும் உணவகங்களில் பழைய கட்டணமே தொடரும். உணவு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகும் தகவல் உண்மை இல்லை’’ என ஓட்டல் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.