கன்னட சினிமாவில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி!
தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார். இதேபோல், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அல வைகுந்தபுராமுலு’ படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 12-ந் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், சமுத்திரகனி மேலும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். உபேந்ரா நடிப்பில் உருவாகி வரும் கப்சா படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடிக்க உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, மராத்தி உள்ளிட்ட 7 மொழிகளில் உருவாக்கப்பட உள்ளது. இப்படம் யஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எஃப் படத்தை போன்று பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.