சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ்!
ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘பாரம்’ என்ற தமிழ்ப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மகாநடி’ படத்திற்கு கிடைத்துள்ளது. கேஜிஎப் படத்திற்கு சிறந்த ஆக்ஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டிற்கும் கிடைத்துள்ளது. இந்தியில் அந்ததுன், மலையாளத்தில் சுடானி பிரம் நைஜீரியா, கன்னடத்தில் நதிசராமி படங்களுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த நடிகைக்காக மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த இசையமைப்பாளர் விருது பத்மாவத் படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.