சீர்காழி கொலை, கொள்ளை குற்றவாளிகள் கைது – காவல்துறைக்கு கமல்ஹாசன் பாராட்டு
சீர்காழியில் 2 பேரை கொலை செய்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
வடமாநில கொள்ளையர்களின் படுபாதக கொலைகள் நெஞ்சைப் பதற வைக்கின்றன. சீர்காழி கொலையில் காவல்துறையினரின் விரைவான செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால் வரும் முன் காக்கும் வகையில் பாதுகாப்பு சோதனைகளும், புலனாய்வுகளும், இரவு ரோந்துப் பணிகளும் முடுக்கி விடப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.