‘சுறா’ படப்பிடிப்பின் போதே அது வேலைக்கு ஆகாது என்று எனக்கு தெரியும் – மனம் திறந்த நடிகை தமன்னா
கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, அயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அதிகமான படங்களில் நடித்து வரும் தமன்னா, வெப் சீரிசிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான லவ் ஸ்டோரிஸ் 2-வில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வெப் தொடரில் படுக்கை அறை காட்சிகளும் லிப் லாக் காட்சிகளிலும் விஜய் வர்மாவுடன நெருக்கமாக நடித்தார். தமன்னா-விஜய் வர்மாவும் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இந்நிலையில், நடிகை தமன்னா, விஜய்யுடன் ‘சுறா’ படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “சுறா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஆனால் அதில் என்னுடைய நடிப்பு மிகவும் மோசமாக இருக்கும். இனிமேல் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக சொல்கிறேன். ‘சுறா’ படப்பிடிப்பின் போதே எனக்குத் தெரியும், அது வொர்க் அவுட் ஆகாது என்று. நிறைய படங்களில் நமக்கே தெரியும் இது சரிவராது என்று ஆனால் நடித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம். நாங்கள் ஒப்புகொண்டிருக்கும் ஒரு விஷயத்தில் பலரின் பொருளாதாரம் உள்ளிட்டவை சம்பந்தபட்டிருக்கிறது. ஆகவே, கமிட்டாகிவிட்டால் அதில் நடித்தாக வேண்டும். அது வேலையின் ஒரு பகுதி” என்று கூறினார்.