Tamilசெய்திகள்

சென்னையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை 45 ஆயிரம் பேர் இணைத்துள்ளனர்

தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றன.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் உள்ள 3750 வாக்குச் சாவடி மையங்களில் ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் நடந்தன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் தலைமையில் நடந்த இந்த முகாம்களில் 45,854 பேர் தனது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை சேர்க்க 6 டி படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர். கருடா இணையதளம் வழியாக 1571 பேர் இணைந்தனர்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிக பட்சமாக 4336 பேரும், வேளச்சேரியில் 4221 பேரும் ஆதார் எண்களை இணைத்து உள்ளனர். சென்னையில் 60 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் மிக குறைந்த அளவிலேயே ஆதார் எண்களை இணைத்து உள்ளனர். பெரும்பாலானவர்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்களை இணைக்க ஆர்வம் காட்ட வில்லை.