சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர் நீதிமன்றத்தற்கு இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் நிதுமோலு மாலா, எஸ்.சவுந்தர் ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
புதிய நீதிபதிகள் நியமனம் தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், நிதுமோலு மாலா மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோரை சென்னையின் கூடுதல் நீதிபதிகளாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அவர்கள் இருவரும் பொறுப்பேற்ற நாளில் இருந்து இரண்டு வருட காலத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக பதவி வகிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.