செல்போன், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு – மத்திய அமைச்சரவை சட்ட திருத்தம்
நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்று சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட பெஞ்ச் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்தது. இருப்பினும், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் அல்ல என்று கூறியது.
இந்நிலையில், செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, புதிய செல்போன் இணைப்பு (சிம்கார்டு) பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து ஆதார் எண்ணை அளிக்கலாம். இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது ஆகும்.