Tamilவிளையாட்டு

டி.என்.பி.எல் கிரிக்கெட் – கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று திண்டுக்கலில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. முகிலேஷ் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.

இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா, பால்சந்ஹர் அனிருத் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் நிதானமாக ஆடினார். கேப்டன் சதுர்வேத் பொறுப்புடன் ஆடினார். இவர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். கார்த்திக் 38 ரன்னில் அவுட்டானார். அபாரமாக ஆடிய சதுர்வேத் அரை சதமடித்து, 75 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் கவுசிக் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மதுரை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.