டி20 போட்டியில் அதிவேக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்திப் யாதவ் சாதனை
வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், குல்தீப் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். குல்தீப் யாதவ் 30 போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
முன்னதாக, சஹல் 34 போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதி வேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (26 போட்டிகள்) முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை ஹசரங்கா (30 போட்டிகள்) உடன் குல்தீப் யாதவ் பகிர்ந்து கொண்டார்.