Tamilசினிமா

நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது தான் உங்கள் எதிரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை – நடிகை தர்ஷா குப்தா கருத்து

சின்னத்திரையில் வெளியான முள்ளும் மலரும், செந்தூரப் பூவே தொடர்களில் நடித்ததன் மூலம் பிரலமானவர் தர்ஷா குப்தா. அதன்பின்னர் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களை கவர்ந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தர்ஷா குப்தா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமல்லாமல் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், ‘நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! உங்கள் எதிரிகளுக்கு மிகப்பெரிய தண்டனை’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.