பாராளுமன்ற தேர்தல் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆலோசனை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ நேற்று முதல் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வருமான வரித்துறை, காவல்துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இன்று 2-வது நாளாக துணை தேர்தல் ஆணையர் அஜய் பதூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள் காணொலி மூலம் பங்கேற்றனர். கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்துவதற்கான ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வாக்குச்சாவடி, வாக்கு எண்ணிக்கை மையங்கள், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.