பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த பிரியங்க சோப்ரா
பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நகரில் கடந்த வாரம் இந்திய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள தாஜ் பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. திரையுலகை சேர்ந்த மிக முக்கிய பிரமுகர்கள், மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே இதில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை பிரியங்கா சோப்ரா இன்று நன்றி தெரிவித்துள்ளார்.
‘தங்களது வருகையால் எங்களை மகிழ்வித்த உங்களது இன்சொற்கள் மற்றும் ஆசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என தனது கணவரை நிக் ஜோனாசை தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டேக்’ செய்துள்ள பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.