பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பின் பேரில் ஜூலை 13, 14-ம் தேதிகளில் 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றார். பிரதமர் மோடி. நேற்று நடைபெற்ற பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த அணிவகுப்பு விழாவில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படை வீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
மேலும், பிரான்ஸ் நாட்டின் செனட் மற்றும் பார்லிமெண்ட் தலைவர்களை அவர் சந்தித்தார். பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானுக்கு சந்தனத்திலான கிடார் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
அதிபரின் மனைவி, அந்நாட்டு பாராளுமன்ற தலைவர், செனட் தலைவருக்கும் அவர் பரிசளித்தார். இந்நிலையில், பிரான்சில் தனது பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.