பீகாரில் தொடரும் கனமழை! – 29 பேர் பலி
பீகார் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்படுகின்றனர். பாட்னாவில் மட்டும் 26 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். பாட்னாவில் வெள்ள நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்காக 2 ஹெலிகாப்டர்களை அனுப்பும்படி விமானப்படைக்கு மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 29 பேர் உயிரிழந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.