புத்தருக்கு போதி மரம், எனக்கு போதை மரம் – பாக்யராஜ் பரபரப்பு பேச்சு
மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், கஞ்சா அடிப்பவர்களை நடுரோட்டில் வச்சு வெட்டணும் என்று கூறினார்.
இதையடுத்து இயக்குனர் பாக்யராஜ் பேசுகையில், “நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லா வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ருனு ஏறியபிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன்.
லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே, ஆனால் இப்படி இருக்கோமே என்று, அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்கு போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.