புரோ கபடி லீக் – பெங்களூர், பாட்னா அணிகள் மோதிய போட்டி டிராவானது
12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
அரியானா மாநிலம் பஞ்சகுலா நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்களூரு அணி 12 – 11 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெங்களூரு அணியினர் அதிரடியாக விளையாடினர். இதனால் ஒரு கட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை விட கூடுதலாக புள்ளிகள் பெற்றிருந்தனர். இறுதிக்கட்டத்தில் பாட்னா அணியினர் துடிப்பாக விளையாடி 40 – 40 என சமனிலைக்கு கொண்டு வந்தனர்.
பரபரப்பான ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.