Tamilசெய்திகள்

மதுரையில் பா.ஜ.க நிர்வாகி கொலை

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே பாஜக நிர்வாகி சக்திவேல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சக்திவேல் மதுரை மாநகர் ஓ.பி.சி. அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

படுகொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட மோதல் காரணமாக சக்திவேல் கொலை நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சக்திவேலின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.