மன்காட் முறையில் அவுட் கொடுக்க கூடாது – ஐபில் சேர்மன் ராஜீவ் சுக்லா
ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அஸ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரை ‘மன்காட்’ ரன்அவுட் ஆக்கினார்.
இது உலகளவில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. ஐசிசி விதிமுறைப்படி சரியான முறையிலான அவுட் என்றாலும், அஸ்வின் அப்படி செய்திருக்கக்கூடாது என்று விமர்சனங்கள் எழும்பியுள்ளன.
இதுகுறித்து ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அணியின் கேப்டன்கள் மற்றும் போட்டி நடுவர் பங்கேற்ற ஒரு கூட்டத்தை ஞாபகப்படுத்தினால், எதிரணி பேட்ஸ்மேன் க்ரீஸை விட்டு வெளியே நின்று கொண்டிருந்தால் அவுட் கொடுக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூடடம் கொல்கத்தாவில் நடந்தது. ஒரு ஐபிஎல் தொடருக்கு முன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அப்போது டோனியும், விராட் கோலியுடன் இருந்தனர்’’ என்று பதிவிட்டுள்ளார்.