மலேசியா மாஸ்டர் பேட்மிண்டன் – சாய்னா காலியிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையும், 7-ம் நிலையில் இருப்பவரும் ஆன சாய்னா நேவால் ஹாங் காங்கை சேர்ந்த புய் யின் யிப்-ஐ எதிர்கொண்டார்.
இதில் சாய்னா 21-14, 14-21, 21-16 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் 2-ம் நிலை வீராங்கனையும், 2017-ல் சாம்பியன் பட்டம் வென்றவருமான ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவை எதிர்கொள்கிறார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி ஹாங்காங்கின் வாங் விங் கி வின்செட்-ஐ எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 23-21, 8-21, 21-18 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.