Tamilவிளையாட்டு

மூன்று வடிவிலான ஐசிசி தொடர் – கேப்டனாக புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா

டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும்.

கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது. இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.

இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.