ராகுல் டிராவிட்டி சாதனையை முறியடித்த விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் 82 ரன்கள் எடுத்து முக்கிய பங்கு வகித்தார்.
29-வது ரன்னை எடுத்தப்போது அவர் ராகுல் டிராவிட்டை முந்தினார். ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தார். விராட்கோலி 229 போட்டியில் 211 இன்னிங்ஸ் விளையாடி 10,943 ரன் எடுத்து உள்ளார். சராசரி 59.47 ஆகும்.
ராகுல் டிராவிட் 344 போட்டியில் 318 இன்னிங்சில் 10,889 ரன் எடுத்துள்ளார். இந்திய அளவில் கோலி 3-வது இடத்தில் உள்ளார். இன்னும் 421 ரன் எடுத்தால் அவர் கங்குலியை முந்துவார்.
கோலி 50-வது அரைசதத்தை நேற்று பதிவு செய்தார். தெண்டுல்கர், டிராவிட், கங்குலி, டோனி, யுவராஜ், முகமது அசாருதீன் ஆகியோருக்கு அடுத்தப்படியாக 50-வது சதம் அடித்த இந்திய வீரர் கோலி ஆவார்.