Tamilசினிமா

ராஜு முருகன் சட்டமன்றத்திற்கு போக வேண்டும் – இயக்குநர் கரு.பழனியப்பன்

ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜு முருகன் எழுத்து, இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்துள்ள படம் ஜிப்ஸி. இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள், டிரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய “துணிவின் பாடகன் பாந்த் சிங்” என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது.

விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பன் பேசியதாவது,

ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ, அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசையமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வேண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அவர் அதை செய்து கொடுத்தார். நான் மருத்துவமனை போகும் முன்பே அவர் அங்கிருந்தார்.

முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும். ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார், அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *